திங்கள், 12 அக்டோபர், 2009

let us share our views and opinions on uniform policy

In this blog, let us share our views and plan our next operations on uniform policy.
i invite all educators to write your views as comments or email me. veeraa1729@gmail.com.
to get login id and password to post blog email me.
if you wish to share in tamil, but donot know to type tamil then write in english which i will translate and publish according to your wish.
சமச்சீர் கல்வி பற்றிய தமிழ்நாடு அரசின் அறிவிப்பும், மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் ஆகிய இரண்டுமே அரசியலமைப்பின் அடிப்படை உத்தரவாதங்களை உறுதிசெய்யவில்லை.
  18 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, சமமான, தரமான கட்டாயக் கல்வி தாய்மொழி மூலம் வழங்கப்பட வேண்டும்.
  பள்ளிகளுக்கான நிதி முழுவதையும் அரசே வழங்கி, அருகாமை பொதுப் பள்ளி முறையைச் செயல்படுத்த வேண்டும்.
  நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவீதம் போன்று இரு பங்கு தொகையை கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று 1964-ல் கோத்தாரி குழு பரிந்துரைத்தது.
  ஆனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்துக்குக் குறைவாகவே கல்விக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.
  "நாடு முழுவதும் இத்தகைய கல்வியை வழங்குவதற்குத் தேவையான நிதியைக் கணக்கிட முடியவில்லை. எனவே, தேவைக்கேற்ப, அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு நிதி அளித்துள்ளோம்' என்று மத்திய அரசு கூறுகிறது.
  ஆனால் இத்தகையக் கல்விக்கு ஆண்டுக்கு ரூ.73 ஆயிரம் கோடி தேவை என்று "கேப்' குழு கூறியுள்ளது. தவிர, அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
  மத்திய அரசின் கேந்திரிய, நவோதயா பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது. மாறாக, மாநிலங்களின் அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ரூ.1,100 முதல் ரூ.1,500 வரை மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. அரசிடம் நிதியில்லை என்று கூற முடியாது. ஏனெனில், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கல்வி வரி வசூலிக்கப்படுகிறது. இதன்படி, சென்னை மாநகராட்சி கல்வி வரியாக ரூ.117 கோடியை வசூலித்துள்ளது.
  இந்த நிதி கல்விக்கு பயன்படுத்தப்படாமல், பொது பட்ஜெட்டுக்கு மாற்றப்படுகிறது.