திங்கள், 4 ஜனவரி, 2010

மெட்ரிக் பள்ளிகளில் அட்மிஷன்?

சமீப காலமாக, அரசு மெட்ரிக் பள்ளிகளை மூடுவதற்கான தனது சதி வேலைகளில் இறங்கியுள்ளது.
சதி - 1 : சில பள்ளிகளில் ஜனவரியிலேயே அட்மிஷன் ஆரம்பித்து முடித்து விடுகிறார்கள். எனவே, மே மாதம் 15வரை எந்த பள்ளியும் அட்மிஷன் போடக் கூடாது.
அரசிடம் நான் கேட்கும் கேள்விகள்:
1. சில பள்ளிகளில் அட்மிஷன் முடிந்தால் என்ன? முடியாவிட்டால் உனக்கென்ன? வேறு மெட்ரிக் பள்ளிகளா இல்லை?  சாக்கடையில் விழுந்து எழுந்து இரவில் கூட நிற்கும் சில அறிவு கெட்ட பெற்றோர்களுக்காக இப்படி ஒரு  உத்தரவு தேவையா?
2. மே  15லிருந்து மே 30க்குள் அட்மிஷன் முடித்து விட வேண்டுமாம். 15 நாளில் எத்தனை அலைச்சல் பெற்றோர்களுக்கு? பிறகு எப்போது சீருடை தைப்பது? புத்தகம் வாங்க, பள்ளி கட்டணம் கட்ட எவன்கிட்ட  போய் 15ந்தேதிக்கு மேல் கேட்டு கடன் வாங்கறது?
3. பள்ளிகள் எந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு தீர்மானிக்குமாம்.
 அதை எப்போது சொல்லுவார்கள்? அடுத்த ஜூனிலா? தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகமென்று அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்கி மருத்துவமனைகள் செயல்பட முடியுமா? அந்த கட்டணத்தில் கட்டடம் கட்ட முடியுமா? பராமரிப்பு பணிகள்தான் மேற்கொள்ள முடியுமா?



4.அந்த கட்டணத்தை விட குறைவாக வாங்கினாலும் தரமான கல்வி தரும் பள்ளிகளில் 15 நாளில் அனைத்து வகுப்புகளுக்கும் அட்மிஷன் முடிந்து விடுமா?
மேலும் கேள்விகள் அடுத்த இடுகையில்.